இந்தியாவில் வருடம் தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்படும். வருகிற 24-ஆம் தேதி தென்னிந்தியாவில் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கும் நிலையில் வட இந்தியாவில் 5 நாள் திருவிழாவாக கொண்டாடப்படும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது மனிதன் தனக்குள் இருக்கும் காலம் தவறி செயல்படுதல், கோபம், பயம், சோர்வு, உறக்கம் போன்ற தீய குணங்களை விலக்கி மேன்மையை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் புத்தாடை வாங்கி அணியப்படுகிறது. இதனையடுத்து நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்யும்போது தான் இறந்த நாளை அனைவரும் உற்சாகமான தீபாவளி பண்டிகையாக கொண்டாட வேண்டும் என நரகாசுரன் கிருஷ்ணனிடம் வரம் கேட்பான்.
இதன் காரணமாகத்தான் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்கப்படுகிறது. அதோடு மனிதனிடம் இருக்கும் பொறாமை, கர்வம், பகுத்தறிவின்மை, பொருட்பற்று, பெருங்கோபம் மற்றும் பேராசை போன்ற தீய குணங்களை விளக்க வேண்டும் என்பதற்காகவும் பட்டாசுகள் வெடிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது அதிகாலை குளித்து முடித்த பிறகு பூஜை செய்து முடித்துவிட்டு புத்தாடை அணிந்து வீட்டில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினால் ஆணவம் மற்றும் அகம்பாவம் அழிந்து செம்மை பெருகி இன்பம் பெருகும் என்பது ஐதீகம்.
தீபாவளி பண்டிகையின் போது தீப ஒளி திருநாள் என்று மற்றொரு பொருளும் சேர்ந்து வருவதால் தான் லட்சுமி தேவியை வரவேற்பதற்காக தீபாவளி பண்டிகையின் போது அகல் விளக்கானது ஏற்றப்படுகிறது என்பது ஐதீகம். மேலும் நரகாசுரனை கிருஷ்ணர் அழிப்பதற்காக புறப்படும் போது அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்வதற்காக செல்கின்றனர். இதனால் அரக்கர்களிடமிருந்து தப்பிப்பதற்காக லட்சுமி தேவி தன்னை நெருப்புக்குள் மறைந்து கொள்கிறாள். இதனால்தான் தீப ஒளி திருநாள் என்று அழைக்கப்படுகிறது என்று மற்றொரு புராண வரலாறும் இருக்கிறது.