கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பிச்சி மல்லி போன்ற பூவின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் ஒரு பெரும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைய மறுபுறம் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை மலர் சந்தை மற்றும் பூச்சிகளை விட மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த குழந்தைக்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மலர்கள் நாள்தோறும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இங்கு இறக்குமதி செய்யப்படும் மலர்கள் கேரளா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு பூ மக்கள் அதிகமாக வாங்கி வருவதால் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக அதன் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.
குறிப்பாக பிச்சிப் பூ கிலோ 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மூன்று மடங்கு உயர்ந்து ஆயிரம் ரூபாய்க்கும் மல்லிகை பூ கிலோ ரூ 300 க்கு விற்கப்பட்ட நிலையில் நான்கு மடங்கு உயர்ந்து ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும் சம்மங்கி ரூபாய் 80லிருந்து 150க்கும் ரோஜா பூ 80 லிருந்து 150 க்கும் கனகாம்பரம் பூ ரூபாய் 80லிருந்து 250-க்கும் மற்றும் சில பூக்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. பூவின் விலை உயர்வால் ஒரு புறம் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைய மற்றொருபுறம் அதனை வாங்கிச் செல்லும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.