Categories
அரசியல்

உலக நாடுகளில் கொண்டாடப்படும் தீபாவளி…. காரணம் இந்தியர்கள் தான்…. வரலாற்று சிறப்பு…..!!!!

தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமல்லாமல் நம்முடைய அண்டை நாடுகளான வங்காளதேசம்,இலங்கை மற்றும் மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.ஆனால் அங்கு கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் பெயர்களும் கொண்டாடும் முறைகளிலும் மாற்றங்கள் உள்ளன. தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் கிருஷ்ணரின் லீலை தான் என அனைவரும் அறிந்திருப்போம்.

உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசுரனை வீழ்த்தி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வெற்றி பெற்ற பின்னர் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றபோது உற்சாகமாக வரவேற்பும் இனிப்பும் வழங்கப்பட்ட நிலையில் தீபாவளி அன்று அனைவரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் அதிலிருந்து தான் தோன்றியது.

அண்டை மாநிலங்களில் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் அங்கு பெயர்களும் கொண்டாடும் முறையும் மாற்றம் ஏற்படும். தமிழ் மன்னர்களுக்கு பண்டைய காலத்தில் ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு இருந்தது. அந்த வணிக தொடர்பின் போது, இந்தியாவிலிருந்து சென்ற பல வணிகர்களும் தாங்கள் இருந்த இடத்தில் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். இதனால் உலக நாடுகளில் இந்தியாவின் பேரரசர்களாக இருந்தவர்களும் மக்களின் விருப்பத்தை ஏற்று தீபாவளியை சிறப்பாக கொண்டாடி உள்ளனர்.தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்து மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

Categories

Tech |