திமுக, அதிமுகவுடன் புதிதாக தொடங்கிய அமமுக போட்டிபோட முடியாது என்று திவாகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு வருகின்ற 2021-ஆம் ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் இப்போதிருந்தே தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதேபோல டிடிவி தினகரனின் அமமுகவும் ஆட்சியை பிடிக்க மும்முரமாக தயாராகி வருகிறது.
இந்தநிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவின் தம்பி திவாகரன் கூறியதாவது, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். என்னுடைய கணக்கு என்றும் தப்பாது. வேரூன்றிய கட்சிகளான திமுக, அதிமுகவுடன் புதிதாக தொடங்கிய அமமுக போட்டிபோட முடியாது. இளைஞர்களுக்காகவும், தமிழ்நாட்டுக்காவும் திமுக தான் தற்போது குரல் கொடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.