Categories
மாநில செய்திகள்

“ரேஷன் பொருட்கள்” வாங்க…டோக்கன்கள் விநியோகம்…!!

செப்டம்பர் மாதத்திற்கான பொருட்கள் வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் இருந்து டோக்கன்கள் இன்றுமுதல் வீடு வீடாக வழங்கப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதையும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்காக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்காக தற்பொழுது வரை ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் மக்களுக்கு வீடுகளுக்கே சென்று டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் நாளொன்றுக்கு 200நபர்களுக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்கப்பட்டு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது செப்டம்பர் மாதத்தில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க டோக்கன்கள் இன்று தொடங்கி, செப்டம்பர் 1 வரை நான்கு நாட்களுக்கு வீடுவீடாக சென்று வழங்கப்படுகிறது. மேலும் வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு செப்டம்பர் 3ஆம் தேதி முதல் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |