தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நயன்தாரா தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் அண்மையில் இரட்டை ஆண் குழந்தைகள் வாடகைத்தாய் முறையில் பிறந்தது. அதன் பிறகு நடிகை நயன்தாரா ஒரு பிரபலமான நடிகையாக இருந்தாலும் கூட கஷ்டம் என்று வந்தால் அள்ளிக் கொடுப்பதில் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில் நடிகை நயன்தாராவின் மாமியார் அதாவது விக்னேஷ் சிவனின் அம்மா நயன் குறித்து பேசிய ஒரு வீடியோவானது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நயன்தாரா வீட்டில் மொத்தம் 8 பேர் வேலை செய்கிறார்கள். அதில் 4 பேர் ஆண்கள் மற்றும் 4 பேர் பெண்கள். இதில் ஒரு பெண் மிகவும் கவலையாக இருந்த நிலையில், அவரிடம் என்ன பிரச்சனை என நயன் கேட்டுள்ளார். அப்போது தனக்கு 4 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக அப்பெண் கூற உடனே யோசிக்காமல் 4 லட்ச ரூபாயை அப்படியே தூக்கி நயன்தாரா கொடுத்து விட்டாராம்.
இதேபோன்று கேரளாவில் வசித்து வரும் நடிகை நயன்தாராவின் அம்மாவும் பணியாளர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் உடனே சென்று உதவி விடுவாராம். ஒருமுறை வீட்டில் வேலை பார்க்கும் ஒரு பணியாளர் கஷ்டம் என்று கூறிய போது நயன் அம்மா யோசிக்காமல் தன்னுடைய தங்க வளையல்களை கழற்றி கொடுத்தாராம். மேலும் இந்த சம்பவத்தை நடிகை நயன்தாராவின் மாமியார் நெகிழ்ச்சியுடன் கூற அந்த வீடியோ மனது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் நயன்தாராவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.