Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலில் இருந்து விலகல் ”தொடர விரும்பவில்லை” குமாரசாமி பேட்டி …!!

அரசியலில் தொடர விரும்பவில்லை என்று கர்நாடக மாநில முன்னாள் முதலவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் பாஜக அரசு ஆட்சி செய்து வருகின்றது. மாநிலத்தில் முதல்வராக எடியூரப்பா தனது பெரும்பானமையை நிரூபித்து  ஆட்சி செய்து வருகின்றார். இந்த தீடிர் அரசியல் மாற்றத்தால் மிகவும் நொந்து போனவர் குமாரசாமி. அவர் தனது அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரும் போது கர்நாடக மக்களிடம் மன்னிப்பை கேட்டு கொள்கின்றேன் என்று உருக்கமாக பேசினார்.

Image result for குமாரசாமி

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி , அரசியலை விட்டு விலகலாமா என யோசித்து வருகிறேன.மாநில வளர்ச்சிக்காக 14 மாதங்கள் நன்றாக வேலை செய்தேன்.நான்  யாரையும் திருப்திபடுத்த வேண்டிய அவசியமில்லை.நிம்மதியாக என்னை வாழ விடுங்கள் இனியும் அரசியலில் தொடர விரும்பவில்லை. மக்கள் மனதில் இடம் கிடைத்தால் போதும் எதிர்பாராத விதமாக அரசியலுக்கு வந்த நான் எதிர்பாராத விதமாக முதல்வர் ஆனேன் இரண்டு முறை முதல்வர் ஆவதற்கு கடவுள் எனக்கு வாய்ப்பு வழங்கினார் என்று தெரிவித்தார்.

Categories

Tech |