இந்தியாவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) ஃப்ரஷர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. அந்த அடிப்படியில் டிசிஎஸ் நிறுவனம் தன் BPS (Business Processing Services) பிரிவுக்கு சமீபத்தில் பாஸ்-அவுட் ஆன ஃப்ரஷர்களை பணியமர்த்த திட்டமிட்டு உள்ளது. கலை மற்றும் அறிவியல், வர்த்தகம் போன்ற துறைகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதனையடுத்து பணியமர்த்தப்படும் ஃப்ரஷர்கள் முதலில் பயிற்சி பெறுபவராக (Trainee) எடுக்கப்படுவார்கள். அதில் சிறப்பாக செயல்படுவோருக்கு CBO (Cognitive Business Operations), Banking and Financial Services and Insurance (BFSI) மற்றும் Life Sciences போன்ற பிரிவுகளில் வேலைவாய்ப்பு வழங்கப்ப்படும். B.Com, BA, BBA, BCS, BCA அல்லது இதற்கு நிகரான படிப்புகளை படித்து முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இருப்பினும் 2022ஆம் ஆண்டில் பட்டப் படிப்பை முடிப்பவர்கள் மட்டுமே BPS பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இதனிடையில் அரியர் வைத்த மாணவர்களால் விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 7 ஆகும். அதன்பின் ஜனவரி 26-ஆம் தேதி எழுத்துப்பூர்வ தேர்வு நடைபெறும். டிசிஎஸ் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த (https://nextstep.tcs.com/campus/#/) இணையதளத்துக்கு செல்லவும்.