Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கும் அதேபோல் பண்ணுங்க… மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்… நாகையில் பரபரப்பு…!!

மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது அண்டை மாநிலங்களில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 3000 உதவி தொகை வழங்குவது போல இங்கும் வழங்கப்பட வேண்டும், மேலும் தனியார் துறைகளில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது போலீசார் அவர்களை மறியலை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அவர்கள் சாலை ஓரமாக அமர்ந்து கொண்டு சுமார் இரண்டு மணி நேரமாக மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |