Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆந்தலாஜி” செப்டம்பர் 2020இல்…. தரமான சம்பவம் காத்திருக்கு….!!

ஆணவம் கொலையை மையமாக வைத்து பிரபல இயக்குநர்கள் இணைந்து திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளனர்.

தமிழகத்தில் அவ்வப்போது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்த கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் அது ஆணவக்கொலை தான். வருடத்திற்கு கட்டாயம் இப்படி ஒரு சம்பவம் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. தனக்குப் பிடித்த பெண்ணையோ, ஆணையோ சாதி மறுப்பு திருமணம் செய்ய முற்படும் போது அவர்கள் மிக தாழ்ந்த ஜாதியினர் ஆக இருக்கும் பட்சத்தில் இந்த ஆணவக்கொலை நிகழ்த்தப்படுகிறது.

இதற்கு தனி சட்டம் இயற்ற கோரியும், இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்காகவும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பல இயக்கங்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக சினிமா துறை சார்பில் இந்த ஆணவ கொலையை மையப்படுத்தி ஆந்தலாஜி என்ற திரைப்படத்தை இயக்க பிரபல இயக்குனர்கள் முடிவு செய்தனர்.

அந்த வரிசையில் கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், விக்னேஷ் சிவன், சுதா கொங்கரா ஆகிய இயக்குனர்கள் இணைந்து இந்த திரைப்படத்தை கடந்த செப்டம்பர் மாதம் இயக்கத் தொடங்கினர். அது இந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. படப்பிடிப்பு முடிவடைந்த இந்த திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் இன் OTT மூலம் வெளியிடப்பட இருக்கிறது. இதற்கான பெயரை நெட்பிளிக்ஸ் தற்போது வரை முடிவு செய்யவில்லை. ஆனால் மிக தரமான படங்களை அளிக்கும் இயக்குனர்கள் இந்த படத்தை இயக்கி இருப்பதால், இந்த திரைப்படம் மிக தரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |