Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பா. ரஞ்சித்தின் தந்தை காலமானார்.!

இயக்குனர் பா. ரஞ்சித்தின் தந்தை உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார்  

கடந்த 2012-ம் ஆண்டு ‘அட்டகத்தி’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தமிழில் அறிமுகமானவர் பா ரஞ்சித். அதன் பிறகு மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கி வெற்றிகண்டார். அதை தொடர்ந்து ரஜினியை வைத்து கபாலி, காலா படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். பா ரஞ்சித்தின் தந்தை M.பாண்டுரங்கன் (63) கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர்  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

Image result for பா. ரஞ்சித் தந்தை

இந்த நிலையில் பா ரஞ்சித்தின் தந்தை இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான திருவள்ளுர் மாவட்டம் கர்லப்பாக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  இன்று மாலை 5 மணி அளவில் கர்லப்பாக்கத்தில் இறுதி ஊர்வலம்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |