திரைப்பட இயக்குனரும், நடிகருமான விசு (74) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
1945ஆம் ஆண்டு பிறந்தவர் விசு.. இவருக்கு தற்போது 74 வயதாகிறது. இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகம் கொண்ட இவர் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் முதலில் நடித்தார். பின்னர் மணல்கயிறு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ரஜினியுடன் உழைப்பாளி, மன்னன், அருணாச்சலம் உள்ளிட்ட படங்களிலும் விசு நடித்துள்ளார். விசு இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளன.
இவர் சமீப காலமாக இவர் வயது முதிர்வு, சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான விசு உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.