பிரபலமான கன்னட நடிகர் ரிஷப் செட்டி. இவர் தற்போது காந்தாரா என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த படம் கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இதனால் காந்தாரா படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி வரை வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத் தன்னுடைய குடும்பத்துடன் சென்று காந்தாரா திரைப்படத்தை பார்த்துள்ளார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த கங்கனா ரணாவத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறியதாவது, நான் என்னுடைய குடும்பத்துடன் வந்து காந்தாரா திரைப்படத்தை பார்த்தேன். நடிகர் ரிஷப் செட்டியின் நடிப்பு என்னை மிகவும் வியக்க வைத்தது. அவருடைய மிரட்டலான நடிப்பு இன்னமும் என் கண் முன்னால் தான் இருக்கிறது. இதை நான் மறப்பதற்கு குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். மிகவும் அதிரூபமான ஒரு சினிமாவை பார்த்த திருப்தி எனக்கு கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்தை நேரடியாக ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார்.