டிராக்டர் டிப்பர் மோதி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள தர்மகுடிகாடு கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வம் தர்மகுடிகாட்டில் இருக்கும் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக சென்ற டிராக்டர் டிப்பர் ஒன்று எதிர்பாராவிதமாக இவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.