Categories
உலக செய்திகள்

மக்களே இனிமேல் ஜாலி தான்…. ‘தொடங்கப்படும் 5ஜி சேவைகள்’…. பிரபல நாட்டின் அதிரடி திட்டம்….!!

இனி வரும் ஆண்டுகளில் அதிக அளவில் தகவல் தொடர்புத்துறையில் முதலீடுகள் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சீனா நாட்டில்  டிஜிட்டல் தொழில் நுட்பத்துறையைச் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு அடுத்த முப்பது வருடங்களுக்கு முதன்மைத்துவம் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது சீனாவின் முக்கிய நகரங்களில் 5ஜி தொழில்நுட்ப சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இ-காமர்ஸ் மற்றும் கணினித்துறையில் அதிக முதலீடுகள் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதிலும்  மக்களிடையே ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கமானது அதிகரித்திருப்பதாக அந்நாட்டு புள்ளியியல் துறை தகவல் அளித்துள்ளது. குறிப்பாக தகவல் தொடர்புத்துறையில் முதலீடுகள் அதிக அளவில் பெருகும் என்று அந்நாட்டின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் இயக்குனரான ஸீ கன் தெரிவித்துள்ளார்

Categories

Tech |