ஈபிள் கோபுரத்தின் உச்சியில் 20 அடி உயரம் கொண்ட டிஜிட்டல் ரேடியோ ஆன்டெனா பொருத்தப்பட்டுள்ளது.
பாரிஸ் நாட்டில் 1889 ஆம் ஆண்டு ஈபிள் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஈபிள் கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாகும். இந்த கோபுரத்தை காண்பதற்காகவே உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாரிஸ் நாட்டிக்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் 1063 அடி உயரம் கொண்ட ஈபிள் கோபுரத்தின் உச்சியில் ஆன்டெனா பொருத்தப்பட்டதன் மூலம் அந்நாட்டில் வானொலி ஒளிபரப்பப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஈபிள் கோபுரத்தின் உச்சியில் 20 அடி உயரம் கொண்ட டிஜிட்டல் ரேடியோ ஆண்டனா ஹெலிகாப்டர் மூலம் பணியாளர்களால் இறங்கப்பட்டுள்ளது. அவ்வாறு இறக்கப்பட்ட டிஜிட்டல் ரேடியோ ஆன்டெனாவை பணியாளர்கள் பத்தே நிமிடத்தில் கோபுரத்தின் உச்சியில் பொருத்தி உள்ளனர். இதனால் தற்போது ஈபிள் கோபுரத்தின் உயரம் 1083 அடியாக உயர்ந்துள்ளது.