இன்டர்நெட் வசதி வந்த பிறகு உலக அளவில் தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்தன. மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இன்டர்நெட் முக்கிய பங்காற்றியுள்ளது. உலக அளவில் இன்டர்நெட் ஏற்படுத்திய அதீத வளர்ச்சியின் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இணையம் பொது பயன்பாட்டுக்கு வந்து 25 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில்,
அதன் இணைப்புகள் 75 கோடியை தாண்டியுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்ட பின், கடந்த நான்கு ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக தமிழகம், கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் 36 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.