Categories
சற்றுமுன் பல்சுவை புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

திக்… திக்.. புதுவை…! ”10ஆம் எண் புயல் கூண்டு”…. கடுமையான பாதிப்பு…. இது மோசமான அறிகுறி….!!

கடலூர், புதுச்சேரியில் 10ஆம் எண் புயல்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது, புயலின் தீவிரத்தை காட்டுகின்றது.

புதுச்சேரியில் இருந்து தற்போது நிவர் புயல் 320 கிலோ மீட்டர் தூரத்திலேயே மையம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய அபாயத்தை குறிக்க கூடிய ஒரு எச்சரிக்கையாகும்.

இதனால் நிவர் புயல் இந்த துறைமுகத்தை  கடுமையாக தாக்கும் அல்லது துறைமுகத்தை கடக்கும் போது இந்த பகுதி மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். மரங்கள் முறிந்து விழும் மின்கம்பங்கள் சாய கூடிய அளவுக்கான மிகத் தீவிரமாக இருக்கும்.

இந்த நிலையில் தற்போது புயல் புதுச்சேரியை நெருங்கி வருவதை இது காட்டுகின்றது. பாதுகாப்பு நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி அரசு தீவிரமாக எடுத்து வருகின்றது. பத்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது பெரிய ஒரு அபாயகரமான எச்சரிக்கையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |