Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் வாரேன்னு சொன்னாரா ? போய் அப்படி கூப்புடுறீங்க… கடவுளையே விமர்சிப்போம் ? சீமான் பரபரப்பு பேச்சு…!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், சதுரங்க விளையாட்டை நான் தொடங்கி வைக்க வருகிறேன் என்று மோடி சொன்னாரா? நான் வருகிறேன் என்று ஏதாவது அறிக்கை விட்டாரா? அழைப்பிதழ் கொண்டு போயிட்டு கால் கடுக்க நின்று வாங்க வாங்க என்று குனிந்து கூப்பிட்டது நீங்களா? அவரா? நீங்க தானே கூப்பிட்டீங்க,

பகையா இருந்தாலும் பண்பாட்டோடு வரவேற்று உபசரிப்பது என்பது தமிழர் மரபு, எதிரியாய் இருந்தாலும் கையெடுத்து  கும்பிடும்போது  வணக்கம்னு சொல்லணும்.. அது நம் மரபு நீங்க கூப்டீங்க, கூப்பிடும் போது உங்கள் பதாகைக்கு பக்கத்தில் அவர் படத்தையும் போட்டு இருக்கலாமே.

அதை செய்யாமல்.. எப்படி நிர்வாகம் பாருங்கள்.. ஒரு முகநூலில் பிரதமரை விமர்சித்து அதை சுட்டி செய்தியில் பிரதமரை விமர்சித்து செய்தி போட்டீர்கள் என்றால்… அதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கமிஷனர் சங்கர் ஜிவால் சொல்றாரு.

நாம எதிர்த்து அதற்கு அறிக்கை கொடுத்தோம். கண்டித்து கொடுத்தோம். அது என்ன கேள்வி எழுப்பினோம் என்றால் ? பிரதமரை நான் விமர்சிக்கல.. முதல்வரை நாங்கள் விமர்சிக்கல.. நாங்கள் விமர்சிக்காத அளவிற்கு நீங்கள் வேலை செய்து விட்டீர்கள் என்றால் நாங்கள் ஏன் விமர்சிக்க போகிறோம்.

நாங்கள் புகழ்ந்து எழுதி நீங்கள் வருகின்ற வழிநெடுகிலும் உங்களைப் பூக்களை தூவி வரவேற்கிற அளவிற்கு வேலை செய்து விடுங்கள். செயலாற்றுங்கள். நாங்கள் ஏன் விமர்சிக்க போகிறோம். எந்த கேள்வியும் கேட்கக் கூடாது, எதிர்த்து எதுவும் பேசக்கூடாது, எதுவும் எழுதிவிட கூடாது என்பது எப்படிப்பட்ட ஜனநாயகம்.

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா ? இந்த பிரதமரும் – முதல்வரும், கடவுளே விமர்சிக்கிறோம். சிவனே, அப்பனே அப்படி தான் நாம பேசுறோம்.. முருகா என்னடா இப்படி பண்ணிட்ட அப்பனே. இறைவனே  நாங்க அவனே, இவனே என்று தான் பேசுறோம். பேரு முருகன்னு வைக்குற, முருகரூன்னு வைக்குறியா? என்னமோ இந்த பைத்திய கார பயலுவ என விமர்சனம் செய்தார்.

Categories

Tech |