தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அபிராமி. இவர் கமல்ஹாசனுடன் இணைந்து ”விருமாண்டி” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். மேலும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு கட்டத்தில் அபிராமி வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து, ஜோதிகா நடிப்பில் வெளியான ”36 வயதினிலே” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். மேலும், இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் பொழுதுபோக்கை கழிக்க ஒரு விளையாட்டில் ஆம் இல்லை என பதில் அளிக்க வேண்டும். அப்போது ”முன்னாள் காதலிக்கு முத்தம் கொடுத்தீர்களா?” என கேள்வி வந்தது. அதற்கு அவர் சிறிது வெட்கபட்டபடி இல்லை என கூறினார். இந்த மாதிரியான கேள்விக்கு தைரியமாக பதிலளித்த அபிராமியை ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.