Categories
அரசியல் மாநில செய்திகள்

மதுரைக்கு ஒன்னும் செய்யலையா..? 10இல்ல… 100 நிறுவனம்… நச்சுனு தெளிவுபடுத்திய PTR …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர்,  நீங்கள் பெரிய பெரிய கம்பெனிகளை எடுத்துக் கொண்டால் 15, 20, 30 லட்சம் ரூபாயில் ஒரு வேலை வாய்ப்பை உருவாக்குகிறார்கள். ஏனென்றால் அவர்கள் நிறைய முதலீடு, மெஷின் எல்லாம் வைக்கிறார்கள். அந்த வேலையினால் செகண்ட் ஆர்டர், மூன்றவது ஆர்டர் வரும் கூடுதல் பொருளாதார வளர்ச்சி பக்கத்தில் வரும். ஆனாலும் சிறுகுறு நிறுவனங்கள் இருக்கிறது முக்கியமானது.

அதிலும் புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ஏற்கனவே சிறந்த கல்வி மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாட்டில் இது போன்ற வாய்ப்புகளை அதிகரிக்கிறது முதலமைச்சருடைய ஒரு முக்கிய இலக்காகவும், நோக்கமாகவும் இருப்பதினால் எந்த மாநிலமும் செய்யாத அளவிற்கு இது ஒரே ஆண்டில் எத்தனையோ வகையில் தொடங்கி இருக்கிறது.

அதிலும் சமூக நீதி காக்கும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தனியாக 30 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு நிதி உருவாக்கப்பட்டுள்ளது.இதில் மதுரையிலிருந்து புதிதாக வேளாண் சார்ந்த பகுதிகளிலும், மாட்டு தீவனங்களுக்கும் புது தொழில்நுட்பத்தில் பயனாளிகள் இந்த திட்டத்தில் அரசாங்கமே….  இவர்களிடம் செய்கின்ற பொருள்களையும், உருவாக்கிய தொழில்நுட்பத்தையும் மேம்படுத்துவதற்கு, அரசாங்கத்திற்கு பயன்படுத்துவதற்கு இதுவரை எங்கேயும் இல்லாத, அரசுக்கு விற்பனை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்,

பல மாதங்களுக்கு முன்னால் உருவாக்கப்பட்டு அதை நிதி நிலையில் அளிக்கப்பட்டு, அதற்காக டெண்டர் விதிமுறைகளை மாற்றி, 50 லட்சம் ரூபாய் வரைக்கும் புது நிறுவனத்திடம் வாங்கினால் அதற்கு மல்டிபிள் பிட் தேவையில்லை, ஏற்கனவே வரலாறு தேவை இல்லை, அப்படி என்பதெல்லாம் முதலமைச்சர்கள் கண்காணிப்பில் உருவாக்கி, அதையும் இந்த டன்ஷனையும் இணைத்து இன்றைக்கு நீங்கள் பார்க்கின்ற விரைவு, இது இன்னும் பல மடங்கு அதிகரித்து,

இன்னும் ஓராண்டு இரண்டு ஆண்டில் தமிழ்நாட்டில் பல பத்து இல்ல, நூறு புது நிறுவனங்களுக்கு இந்த திட்டங்கள் ஊக்கம் கொடுத்து வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு அடித்தலமாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் அமைச்சரிடம் முன்னாள் அமைச்சர் நீங்கள் மதுரைக்கு என்ன செய்தீர்கள் ? என்ன கொண்டுவந்தீர்கள் என்று விமர்சனம் செய்கின்றார் என்ற கேள்விக்கு,  ஆர். பி. உதயகுமாருக்கு  எல்லாம் பதில் சொல்கிற ஆள் நான் இல்ல,ஏற்கனவே விசாரணை கமிஷன் உருவாக்கியுள்ளோம். ஆர் பி உதயகுமார் செய்த ஊழல் எல்லாம் பேச ஆரம்பித்தால் நேரம் பத்தாது என விமர்சித்தார்.

Categories

Tech |