நடிகர் வினய் நடிக்க வருவதற்கு முன்னால் என்னென்ன வேலை செய்துள்ளார் என்ற தகவலை பகிர்ந்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் வினய் இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் வினய் உன்னாலே உன்னாலே, ஒன்பதுல குரு, என்றென்றும் புன்னகை மற்றும் பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், நடிகர் வினய் டாக்டர் படத்தில் பணிபுரிந்தது பற்றியும் தனது வாழ்க்கைப் பயணத்தை பற்றியும் பேசியுள்ளார். நானே ஆச்சரியப்படும் வகையில் டாக்டர் படப்பிடிப்பை மகிழ்ச்சியாக நடத்தினார்கள் என்று கூறியுள்ளார்.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் விஸ்கி கம்பெனி மற்றும் வங்கி போன்ற இடங்களில் வேலை செய்துள்ளேன் என்றும் கூறினார்.மேலும், ஒரு கட்டத்திற்கு மேல் ஒரே அறையில் அமர்ந்து வேலை செய்ய விருப்பமில்லாததால் நடிக்க வந்ததாக கூறியுள்ளார்.