மின்சார கனவு படத்தில் பிரபுதேவா மற்றும் கஜோலுக்கு டப்பிங் கொடுத்தது யார் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு பிரபுதேவா, கஜோல், அரவிந்த் சுவாமி மற்றும் நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியான மின்சார கனவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தின் கதையை விட பாடல்கள் தான் மக்களுக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தன.
மேலும், இந்த படத்தில் பிரபுதேவா மற்றும் கஜோலின் காதல் பாடல்கள் மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றது. இந்நிலையில், பிரபுதேவா மற்றும் கஜோலுக்கு டப்பிங் பேசியது நடிகர் விக்ரம் மற்றும் நடிகை ரேவதி தான் என தெரியவந்துள்ளது.