ஐரோப்பா நாடுகளில் ஊரடங்குக்கு எதிராக பல இடங்களில் வன்முறை வெடித்து வருகிறது.
ஐரோப்பா நாடுகளில் கொரோனா ஊரடங்குக்கு எதிராக பலர் வன்முறையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நெதர்லாந்தில் மர்ம கும்பல் ஒன்று கொரோனா பரிசோதனை மையத்தை தாக்கி பட்டாசுகளை கொளுத்தி போட்டு பெரும் தீ விபத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
டென்மார்க்கில் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமரின் உருவ பொம்மைகள் எடுக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு கொரோனா ஊரடங்கு நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இதுவரை 3,600 பேர் கோரானா ஊரடங்கு மீறியதால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.