Categories
உலக செய்திகள்

ஏமாற்றிய சீனா…!! ”ரேபிட் டெஸ்ட் கிட்” வெளியான உண்மை தகவல்…!!

இந்தியாவில் 2 நாட்கள் ரேபிட் டெஸ்ட் கிட் சோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த வேகமாக பரிசோதனை செய்யும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை சீனாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இந்த கருவிகள் அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான அளவு அனுப்பி வைத்த மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. மாநிலங்களும் ரேபிட் டெஸ்ட் கிட் மூலமாக பரிசோதனையை அதிகப்படுத்தின. ஆனால் ராஜஸ்தான் , மேற்குவங்கம் மாநிலத்தில் இது சரியான தகவலை கொடுக்க வில்லை என்ற குற்றசாட்டு எழுந்ததோடு ராஜஸ்தான் ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்தி இனி சோதனை பண்ணமாட்டோம் என அறிவித்தது.

10 நாட்களில் ஊரடங்கு :

இந்த நிலையில் தான் நேற்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலம் இரண்டு நாட்களுக்கு எந்த மாநிலமும் சோதனை செய்யவேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்தது. ஐ.சி.எம்.ஆர் கூறியது அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் இருந்தத்த்து. இன்னும் 10 நாட்களில் ஊரடங்கு முடிய இருக்கின்றது. ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை வைத்து வேகமாக சோதனை மேற்கொள்ள வில்லை என்றால் எப்படி கொரோனவை கட்டுப்படுத்தமுடியும் என்றெல்லாம் யூகங்கள் எழுந்தன.

புதிய வழிகாட்டல் :

கொரோனவை கட்டுப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் ஒன்றாகவே இருந்தாலும்., எந்த பயனும் இல்லாத சோதனை கருவிகளை வைத்துக் கொண்டு நாம் கொரோனா சோதனையை மேற்கொண்டால் அது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் எனவே தான் ரேபிட் கிட் டெஸ்ட் மூலம் ஐ.சி.எம்.ஆர் எப்படி சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வுக்குட்படுத்திய பிறகு சில நாட்களில் அனைத்து மாநிலங்களுக்கும் புதிய வழிகாட்டல் வழங்கப்படும் என்று கூறிய ஐ.சி.எம்.ஆர் அதுவரை ரேபிட் கிட் டெஸ்ட் மூலம் சோதனை நடத்தவேண்டாம் என்று தெரிவித்தது.

Nadine Dorries 'met hundreds of people' before she was diagnosed ...

சீனா மீது கோபம் :

கொரோனவை  தோற்றுவித்த சீனா மீது ஒட்டுமொத்த உலக நாடுகளும் கோபத்தில் இருக்கும் நிலையில், இப்படி தரமற்ற பொருளை அதுவும், உயிரைக் காக்கும் மருத்துவத்தில் தந்து விட்டார்களே..! என்று இணையதள வாசிகள் மக்களின் வாழ்வை கேள்விக் குறியாகியுள்ளது சீனா என்று பலரும் ஆதங்கத்தை தெரிவிக்க தொடங்கின. சமூக வலைதளங்களில் சீனாவுக்கு எதிரான கருத்துக்கள் பறந்தது. ஏற்கனவே இதே போல சீனாவிடம் ரேபிட் கிட் டெஸ்ட் கிட்டுகளை வாங்கிய பல நாடுகள் கிட்டுகள் தரமற்றவை என்று மீது குற்றம் சாட்டினர். இந்த வரிசையில் இந்தியர்களும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தது.

ஐ.சி.எம்.ஆர் கூறியது என்ன ? 

ரேபிட் டெஸ்ட் கிட்கள் சீனாவில் இருந்து இந்தியா வந்ததும் நேற்று முன்தினம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ரேபிட் டெஸ்ட் கிட்களை 20 டிகிரிக்கு குளிரூட்டப்பட்ட பகுதியில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். 20 டிகிரிகளுக்கு மேலாக இருக்கும் பகுதியில் அதனை சேமித்து வைத்தால் அது சரியான முடிவை காட்டாது என்று தெரிவித்திருந்தார்கள். இதனையடுத்துதான் நேற்று,  ரேபிட் டெஸ்ட் கிட் எவ்வாறு செயல்படுகிறது, துல்லியமான முடிவுகளை கொடுக்கின்றதா நிறைய விஷயங்களை நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றோம் இது சம்பந்தமான அறிவுறுத்தல்கள் இன்னும் 2 நாட்களில் வழங்கப்படும் என்று ஐ.சி.எம்.ஆர்  கூறியது.

ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் : 

ஐ.சி.எம்.ஆர் கூறியதை பெரிய விஷயமாக பார்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் ஜம்மு-காஷ்மீரில் குளிர் காலம்.டெல்லியில் மிதமான வெப்பம் இருக்கும். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடுமையான வெப்பம் சுட்டெரிக்கும். தென்னிந்தியாவிலும் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. எனவே ஒவ்வொரு பிராந்தியத்திலும் இந்த முடிவுகள் மாறுவதாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிக வெப்பம் நிலவக்கூடிய ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தில் இந்த பிரச்சனை இருக்கிறது.

New corona test could give results in just 30 minutes - Rapid ...

அதிக வெப்பம் : 

எனவே இந்த கருவிகளை சரியான வெப்பநிலையில் வைக்க வேண்டுமா?  எந்த மாதிரியான பகுதிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலவக்கூடிய வெப்பநிலைக்கும், சீனா, தென் கொரியா நாடுகளில் இருக்கக் கூடிய வெப்ப நிலைக்கும் பல மாறுபாடுகள் உள்ளது. இந்நிலையில் ஐ.சி.எம்.ஆர் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் குறித்து புதிய ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றார்கள்.

சீனா ஏமாற்றியதா ? 

இதனால் சீனா தரமற்ற ரேபிட் கிட்டுகளை வழங்கியதா ? இல்லை இந்தியாவில் நிலவும் காலசூழ்நிலையால் ரேபிட் கிட்டுகள் தவறான முடிவை காட்டுகின்றதா ? என்று பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். அதே நேரத்தில் சீனா இந்த சூழலில் இப்படி ஒரு விஷயத்தை செய்திருந்தால் கண்டிப்பாக உலக நாடுகள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மொத்தத்தில் கொரோனா ஒட்டுமொத்த உலகத்தாலும் விரட்டப்பட வேண்டிய ஓன்று.

Categories

Tech |