Categories
சினிமா

“ரூ. 250 கோடிக்கு ஜெட் விமானம்” நடிகர் அக்ஷய் குமார் வாங்கியுள்ளாரா….? அவரே சொன்ன விளக்கம் இதோ….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் எந்திரன் 2.0 என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். இந்நிலையில் திரை துறையைப் பொறுத்தவரை முன்னணி நடிகர்கள் என்றாலே அதிக சம்பளம் வாங்குவார்கள் என்பது அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒரு விஷயமே. இப்படி அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள் என்று தகவல்கள். அதன் பிறகு பிரபலங்கள் புதிதாக வீடு, கார் போன்றவைகள் வாங்கும்போது அது இணையதளத்தில் மிகவும் வைரலாகும்.

அந்த வகையில் நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் 250 கோடி ரூபாய் கொடுத்து ஒரு பிரைவேட் ஜெட் விமானத்தை வாங்கி இருப்பதாக இணையதளத்தில் தகவல்கள் தீயாக பரவியது. இந்த தகவல்களுக்கு தற்போது நடிகர் அக்ஷய் குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக விளக்கம் அளித்துள்ளார். அதாவது நாம் சிறு குழந்தைகளாக இருக்கும்போது பொய் பேசுபவர்கள் குறித்து கேள்விப்பட்டிருப்போம். சிலர் இன்னும் வளர்ச்சி அடையாமலே இருக்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும் என்ற மனநிலையில்தான் நான் இருக்கிறேன். மேலும் தான் ஜெட் விமானம் வைத்திருப்பதாக கூறப்படும் தகவல்களுக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |