சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் நடந்த இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஷாருக் கான் 15 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 33 ரன்கள் குவித்து ஆட்ட நாயகனுக்கான விருதை பெற்றார்.
2021 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இறுதிப் போட்டி நேற்று டெல்லியில் நடந்தது. இதில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடக அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. இதில் தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட் கைப்பற்றினார். இதன்பிறகு 152 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு தமிழக அணி விளையாடியது. இதற்கான வழங்கிய ஜெகதீசன் 41 ரன்னில் வெளியேற ,ஹரி நிஷாந்த் 23 ரன்னில் ஆட்டம் இழந்தார் .இதன்பிறகு இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய ஷாருக் கான் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.
Fini 𝙎𝙚𝙚 ing off in sty7e! 💛#SyedMushtaqAliTrophy #WhistlePodu 🦁 pic.twitter.com/QeuLPrJ9Mh
— Chennai Super Kings (@ChennaiIPL) November 22, 2021
அப்போது கடைசி பந்தில் 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அப்போது ஷாருக் கான் பந்தை சிக்ஸருக்கு அடித்து விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். இதனிடையே கடைசி பந்தில் ஷாருக் கான் சிக்ஸர் அடித்து விளாசி அணியை வெற்றி பெற வைத்ததை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ரசித்து பார்த்த காட்சி இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அதேசமயம் பலமுறை சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற செய்யும் உலகின் தலைசிறந்த ஃபினிஷர் என அழைக்கப்படும் மகேந்திரசிங் தோனி ,நேற்றைய போட்டியில் ஷாருக் கான் கடைசி பந்தில் அடித்த சிக்ஸரை ரசித்த காட்சியை சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.