Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

ரெய்னாவுடன் சண்டைப்போட்ட தோனி – வெளியாகிய பரபரப்பு தகவல் …!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி மற்றும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா சண்டையிட்டுக் கொண்டதாக பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து பரவிவரும் கொரோனாவால் நடப்பு ஆண்டுக்கான  ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஐபிஎல் அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளனர். சென்னை அணியும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் இந்தியா திரும்பியுள்ளார். சொந்த காரணங்களுக்காக ரெய்னா இந்தியா திரும்பியதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, துணை கேப்டன் ரெய்னா இருவர் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கேப்டன் தோனிக்கு போல் தனக்கும் பால்கனியுடன் கூடிய அறை தனக்கு தரப்படாதது குறித்தும்,  தோனி அறிவுரை படி சென்னையில் நடந்த முகம் பற்றியும் அணி நிர்வாகத்திடம் ரெய்னா கேள்வி எழுப்பியதாக  தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகத்தான் அவர் உடனடியாக இந்தியா திரும்பியதாக கூறப்படுகிறது.

Categories

Tech |