Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் சாதனையைத் தகர்த்த கோலி….!!

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை அதிவேகமாகக் கடந்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி பெங்களூருவில் நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 89 ரன்கள் அடித்தார்.

இந்தப் போட்டியில் விராட் கோலி 82 ரன்களைக் கடந்தபோது ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களைக் கடந்த கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார்.

இதற்கு முன்னதாக தோனி 127 இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்திருந்தார். ஆனால், விராட் கோலி 82 இன்னிங்ஸ்களிலேயே கேப்டனாக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். தோனிக்குப் பின், பாண்டிங் 131 இன்னிங்ஸ்களிலும், தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித் 135 இன்னிங்ஸ்களிலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி 136 இன்னிங்ஸ்களிலும் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்

Categories

Tech |