Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL ஐ தொடர்ந்து…. உலக கோப்பையில் தோனி? வைரலாகும் பயிற்சியாளர் கருத்து….!!

டி20 உலகக் கோப்பை போட்டியில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து பயிற்சியாளர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் கிரிக்கெட் வீரரான தோனிக்கு ரசிகர்கள் இல்லாத இடமே கிடையாது. உலக அளவில் அனைவராலும் விரும்பப்படும் வீரராக தோனி திகழ்கிறார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்கள் விரும்பாத ரிட்டயர்மென்ட் டோனியின் ரிட்டயர்மென்ட் தான். அந்த அளவுக்கு இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி, அணியை சிறப்பாக வழி நடத்தி பல வெற்றிகளை குவித்து தந்துள்ளார்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் தோனி தெரிக்க  விடுவார் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் தோனி சிறப்பாக விளையாடினால் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளர் சாஸ்திரியும் கூறியுள்ளார். 2019 ஒரு நாள் உலக கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த இடத்திலும் கேப்டன் தோனி பங்கேற்க வில்லை என்பதும் குறிப்பிடதக்கது. 

Categories

Tech |