Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20….. தோனி இடத்தில் இனி இவர் தான்….. முன்னாள் கிரிக்கெட் வீரர் பரிந்துரை….!!

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 விளையாட்டில் கீப்பராக கேஎல் ராகுல் தான் பணியாற்ற வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் பரிந்துரை செய்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து உள்ள சூழ்நிலையில், கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் அனைத்தும் தேதி அறிவிப்பின்றி சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நேரத்தில், இந்திய t20 கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  யார் யார் எந்தெந்த இடங்களில் விளையாட வேண்டும் என்பது குறித்து பல்வேறு தகவல்களை பல்வேறு தரப்பினர் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இந்திய அணியின் கீப்பராக கேஎல் ராகுல் தான் பணியாற்ற வேண்டும் என முன்னாள் வீரர் திப் தாஸ்குப்தா என்பவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

மிக குறுகிய காலத்தில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும், கீபிங் செய்ய வேண்டும் என்பது குறித்து கேஎல் ராகுல் நன்கு புரிந்து கொண்டுள்ளார். அவரிடம் பல தனிதிறமைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அதிக டெக்னிக்கல் திறமை கொண்ட அவர் முறையான கீப்பராக இருப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |