Categories
சினிமா தமிழ் சினிமா

“சோழ மன்னராக அவதாரம் எடுக்கும் தனுஷ்”…. பொன்னியின் செல்வன் பட நடிகரின் மாஸ் அப்டேட்….!!!!!!

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிப்பார் என பார்த்திபன் கூறியுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ரீமாசென் மற்றும் ஆண்ட்ரியா நடித்து வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். பழங்கால சோழப் பேரரசுக்கும் பாண்டிய பேரரசுகும் இடையிலான போர் குறித்து இந்த படத்தில் கூறப்பட்டிருந்தது. ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக பிரம்மாண்டமாக இருந்தது. அன்று ரசிகர்களால் பெரிதும் கவனிக்கக் கூடியதாக இந்த படம் இருந்தது.

பலரும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் மீண்டும் வர வேண்டும் என செல்வராகவனிடம் கேட்டு வந்த நிலையில், ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதிய போஸ்டருடன் ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் வெளியிட்டார். மேலும் அதில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் படம் 2024 ஆம் வருடம் வெளியாகும் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்திபன் நேற்று தஞ்சாவூரில் இருக்கும் திரையரங்கிற்கு சென்று பார்த்து பிறகு தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அப்போது பத்திரிக்கையாளர்களிடம் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசி இருக்கின்றார். அவர் கூறியுள்ளதாவது, ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் மறுபடியும் வரும். ஆனால் எனக்கு பதிலாக அந்த கேரக்டரில் தனுஷ் நடிப்பார். முதல் பாகத்திலேயே தனுஷ் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு பதில் நான் நடித்திருந்தேன். தற்போது இரண்டாம் பாகத்தில் நான் நடிப்பதற்கு பதிலாக தனுஷ் நடிப்பார். அவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார். இந்த தகவலானது தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Categories

Tech |