Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்”…. படம் குறித்து வெளியான அசத்தலான அப்டேட்…. என்னன்னு தெரியுமா….?

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை.

தற்போது இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ”கேப்டன் மில்லர்” படத்தின் நடித்து வருகிறார். 1930- 40 காலகட்டத்தில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், சந்திப் கிஷன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் வெளிநபர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் புகைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இது எப்போ என பதிலளித்துள்ளார்.

Categories

Tech |