நடிகர் தனுஷ் அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் ‘கர்ணன்’ படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’. இத்திரைப்படம் முதல் நாளிலேயே 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து தனுஷ் தற்போது ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில், தனுஷ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் அமெரிக்காவிலுள்ள திரையரங்கில் கர்ணன் படத்தை பார்த்துள்ளார். அப்போது திரையரங்குகளில் கூட்டம் நிறைந்து வழிந்ததை கண்ட தனுஷ் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணுவிடம் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.