Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் படப்பிடிப்பில் பரபரப்பு…. நிஜமா அடிச்சாங்களா….? கதறும் துணை நடிகர்கள்….

திருநெல்வேலியில் நடந்த தனுஷ் படப்பிடிப்பின்போது  துணை நடிகர்களுக்கு நிஜமாக அடி விழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது  

மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படத்தில், தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். திருநெல்வேலியில் உள்ள கருங்குளம் மற்றும் புளியங்குளம் பகுதிகளில் இறுதிகட்ட படப்பிடிப்பு படமாக்கப்பட்டது. இப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரும்பாலானோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில்  சென்னையில் வாய்ப்பு வழங்கப்படாத துணை நடிகைகள் பலர் இருக்கும் நிலையில்,  நடிக்க வாய்ப்பு கிடைத்த துணை நடிகர் , நடிகைகளுக்கு கிடைத்த வாய்ப்பு துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் நடித்த துணை நடிகர் நடிகைகளுக்கு உயிரோட்டமாக காட்சிகள் இருப்பதற்காக சண்டைக்காட்சிகளின் போது அடிகள் நிஜமாக  விழுந்துள்ளது. இதில் பலர் வெறும் காலில் கருவேலங்காட்டு பகுதிகளில் நடக்க வைக்கப் பட்டிருக்கிறார்கள். இதைப்பற்றி அவர்கள் கூறியதாவது, “இப்படி அடித்து எதார்த்தமாக வர வைப்பார்கள் என்று, நினைக்கவில்லை” என்றனர். கை கால் முறிவு மற்றும் வலிப்பு ஏற்பட்டுள்ளதால் சிலர் சிகிச்சையில் உள்ளனர். இன்னும் பேசிய ஊதியம் வழங்கப்படவில்லை எனவும்,  இனிமேல் பலரும் இவரது இயக்கத்தில் நடிப்பதற்கு பயப்படும் நிலை உள்ளது எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |