Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்திக் சுப்புராஜ்க்கு தொல்லை கொடுக்கும் தனுஷ்…. ஏன் தெரியுமா…?

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு தொல்லை கொடுத்து வருவதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஜூன் 18-ஆம் தேதி பிரபல ஓடிடிதளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் ட்விட்டர் ஸ்பேசில் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது பேசிய தனுஷ் கூறியதாவது, “ஜகமே தந்திரம் திரைப் படத்தின் ரிலீஸுக்காக நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறோம். தற்போது இப்படம் மக்களிடம் போய் சேரப் போகிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தில் நான் நடித்துள்ள சுருளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

ஆகையால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நான் கார்த்திக் சுப்புராஜ்க்கு தொல்லை கொடுத்து வருகிறேன். இந்த படம் என் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் மற்ற ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். குறிப்பாக இப்படத்தின் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்துள்ளது. ஆனால் பாடல்களை விட பின்னணி இசை மிகவும் சிறப்பாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |