Categories
சினிமா தமிழ் சினிமா

”எப்போது பாயும் தோட்டா” காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்….!!

நடிகர் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் எப்போது வெளியாகுமென்று தொடர்ந்து ரசிகர்கள் காத்திருந்து வருகின்றனர்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்து உருவான படம் என்னை நோக்கி பாயும் தோட்டா . இந்த படத்துக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். இருந்தாலும் இந்த படம் இன்னும் திரைக்கு வராமலே இருந்து வருகிறது. 2016ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எண்ணை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ”மறு வார்த்தை பேசாதே” பாடல் வெளியிடப்பட்ட பின்னர் இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

விண்ணைத்தாண்டி வருவாயா , அச்சம் என்பது மடமையடா போன்ற பாடங்களில் காதலை ரொம்ப அழகாக கையாண்டு இருந்த கவுதம் வாசுதேவ் மேனன் இந்த படத்த காதலின்  அழகை  உச்சம் தொட்டு இருப்பார் என்று ”மறு வார்த்தை பேசாதே” பாடல் நிரூபித்து இருப்பதாக இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட  பிறகும் தள்ளிப்போன என்னை நோக்கி தோட்டா திரைப்படம் கடந்த வாரம் 6_ஆம் தேதி நிச்சயம் இந்த படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருந்தார்கள்.

ஆனால் படத்தின் மீதான பொருளாதார நெருக்கடியால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. படத்திற்கான பொருளாதார நெருக்கடியை நீக்குவதற்கு படக்குழு பல முயற்சிகளை மேற்கொண்டாலும், கடைசி வரைக்கும் இந்த படம் வெளியாகாமலே இருந்து வருகின்றது. கவுதம் வாசுதேவ் மேனன் என்னை நோக்கி பாயும் திரைப்படத்தின் பொருளாதார நெருக்கடிகளை சரி செய்து உடனடியாக இந்த திரைப்படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார்.

ஆனால் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா , மோகன்லால்,  ஆர்யா சாயிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் காப்பான். இது செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இதற்க்கு ஒரு வாரத்துக்கு முன்பாக என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளியிடலாம் என்று நினைத்த நிலையில் , அப்படி என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் திரையரங்க எண்ணிக்கையை காப்பான் திரைப்படம் குறைத்து விடும் என்பதால் செப்டம்பர் 13 ஆம் தேதி என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று லைகா கோரிக்கை வைத்துள்ளது.

லைக்காவின் கோரிக்கையை கவுதம் வாசுதேவ் மேனன் ஏற்றுக் கொண்ட வரக்கூடிய வாரங்களில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை வெளியாகுமா என்ற கேள்வி எழுந்திருக்க்கின்றது. அதே போல  செப்டம்பர் 27-ம் தேதி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை திரைப்படமும் ,  அக்டோபர் 4_ஆம் தேதி தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படம் வெளியாகும் என்பதால் தீபாவளி முடியும் வரை என்னை நோக்கி பாயும் தோட்டா காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. தீபாவளிக்கு வெளியாக கூடிய பிகில் திரைப்படத்தின் திரையரங்கு எண்ணிக்கை குறையும் போது என்னை நோக்கி பாயும் திரைப்படம் வெளியாகும்  என்று படக்குழு காத்திருக்கின்றது.

Categories

Tech |