Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை சென்றார் டிஜிபி சைலேந்திரபாபு ..!!

கோவை உக்கடத்தில் கார் வெடித்த இடத்திற்கு சென்றார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு.

கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நிலையில்,  சம்பவ இடத்திற்கு தமிழக காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வருகை தந்து ஆய்வு நடத்தி வருகின்றார்.

நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அவருடன் ஆய்வு மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தடவியல் சோதனையும் நடைபெற்று வருகிறது. இன்று  அதிகாலை 4:30 மணியளவில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |