Categories
மாநில செய்திகள்

“தேவர் கவசம்” ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு ஆதரவு…. காந்தி மீனாளின் தடாலடி முடிவால் அதிமுகவில் புதிய பரபரப்பு…..!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவருக்கு குருபூஜை நடத்தப்படும். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த அம்மா ஜெயலலிதா 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை தேவர் சிலைக்கு வழங்கினார். இதனால் அதிமுக கட்சிக்கு முக்குலத்தோர் மத்தியில் செல்வாக்கு பெருகியது.

இதனையடுத்து ஒவ்வொரு வருடமும் தேவர் ஜெயந்தி நடைபெறும் போது அதிமுக கட்சியின் பொருளாளராக இருந்த ஒ. பன்னீர்செல்வம் வங்கியில் இருக்கும் தங்க கவசத்தை எடுத்து முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அணிவிப்பார். இவருடன் சேர்ந்து முத்துராமலிங்க தேவரின் தந்தை உக்கிரபாண்டிய தேவரின் சகோதரி மீனாளின் மகனான தங்கவேல் தேவரின் மகள் காந்தி மீனாளும் சேர்ந்து வங்கியில் கையெழுத்திடுவார் அப்போதுதான் கிரீடம் கிடைக்கும்.

முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு அறங்காவலராக காந்தி மீனாள் இருக்கிறார். இந்நிலையில் அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த மாதம் 16-ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதாக கூறி வங்கியில் ஒரு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதி வங்கிக்கு நேரில் சென்று திண்டுக்கல் சீனிவாசன் தங்க கவசத்தை அணிவதற்கான உரிமை கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

கடந்த 3-ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் ஆகியோர் தங்க கவசத்திற்கு உரிமை கோரி வங்கியில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர். இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினரிடம் தங்க கவசத்தை ஒப்படைக்க முடியாது என்று அதிரடி முடிவுக்கு தற்போது காந்தி மினாள் வந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் இடையே தனித்தனியாக சென்று காந்தி மீனாளிடம் ஆதரவு கேட்டதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |