கடந்த அக்டோபர் மாதத்தில் பிரேசிலின் அமேசான் காடுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு காடு அழிப்பு சம்பவம் நடந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசிலின் National Institute for Space Research அமேசான் காடுகள் சுமார் 877 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அக்டோபர் மாதத்தில் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் 5 சதவீதம் அதிகமாக காடுகள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் அழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் இந்த வருடம் மட்டும் இதுவரை 7 ஆயிரத்து 880 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காடுகள் விவசாயம் மற்றும் சட்ட விரோத சுரங்கங்கள் செய்வதால் அழிந்துள்ளது. மேலும் இதுவரை 10 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான அமேசான் காடுகள் அதிபர் ஜேர் போல்ஸனாரோ ஆட்சிக்கு வந்ததில் இருந்து அழிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.