Categories
அரசியல் மாநில செய்திகள்

கொரோனா வைரஸை அழிக்க “ஒரு கிளாஸ் ரசம் போதும்”… வைரலான ராஜேந்திர பாலாஜியின் பேச்சு..!!

கொரோனா வைரஸ்க்கு ராஜேந்திர பாலாஜி ஒரு புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்காவிட்டால் நாட்டு வைத்தியம் அதற்கு சிறந்த மருந்து என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். கோடிக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் கண்டு உலக நாடுகள் அனைத்தும் அஞ்சும் சூழலில் கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்த ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார்.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் அம்மா கிளினிக்கை திறந்து வைக்கும்போது மக்கள் மத்தியில் உரையாடினார். அப்போது மிளகு, சுக்கு, பூண்டு போன்ற பொருட்களை வைத்து ரசம் வைத்து ஒரு கிளாஸ் சாப்பிட்டால் கொரோனா செத்துவிடும் என்று கூறியுள்ளார். அமைச்சர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Categories

Tech |