சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நிதி திருட்டில் என்று கூறி பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.
இந்த போராட்டத்தை பொதுப் போக்குவரத்து கழக பிரிவு தலைவரான சுந்தரராஜ் என்பவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர், செயலாளர், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.