தூய்மைப் பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தூய்மைப்பணியாளர்கள் மற்றும் காவலர்கள் ஒருங்கிணைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர், சி.ஐ.டி.யு. மாவட்ட உதவித் தலைவர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊதிய உயர்வு வழங்கபட வேண்டும் எனவும், பாக்கி இல்லாமல் சம்பளத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.