Categories
உலக செய்திகள்

இலங்கையில்… மருந்துப்பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை…. அரசு மருத்துவர்கள் போராட்டம்…!!!

இலங்கையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், நாடு முழுக்க அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அங்கு அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கும் கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே, சுகாதார கட்டமைப்பு மொத்தமாக சீர்குலைந்து விட்டது. இதனால்,  யாழ்ப்பாணம் நகரில் இருக்கும் மருத்துவமனையின் வளாகத்தில் அரசு மருத்துவர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |