Categories
உலக செய்திகள்

முகக்கவசம் தேவையில்லை என்று முதலில் அறிவித்த நாடு.. மீண்டும் பரவத்தொடங்கிய கொரோனா..!!

இஸ்ரேலில் சமீபத்தில் டெல்டா வைரஸ் அதிகமாக பரவி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேலில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செலுத்தப்பட்டது. இதில் அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், பொது இடங்களில் முகக் கவசம் அணிய தேவை இல்லை என்று கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா விதிமுறைகளிலும் தளர்வுகள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. நாட்டில் உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் தான் தற்போது இஸ்ரேலில் பரவி வருகிறது.

Categories

Tech |