Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு…. 5 பேர் கொண்ட சிறப்பு குழு…. மத்திய அரசு அதிரடி….!!!!

டெல்லியில் காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.வி. ரமணா, 24 மணி நேரத்தில் காற்று மாசை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் கெடு விதித்தனர்.

இந்த உத்தரவையடுத்து டெல்லியில் காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட பணிக் குழுவை அமைத்துள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் 17 பறக்கும் படைகள் கொண்ட கண்காணிப்பு குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது பறக்கும் படைகள் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |