டெல்லியில் 4 மாதங்களாக சம்பளம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராவணன் உருவபொம்மையை தீ வைத்து எரித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் முன்கள வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள இந்துரா மற்றும் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் கடந்த நான்கு மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை எனக் கூறி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் தசரா பண்டிகை வெகு சிறப்புடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தங்களது உண்ணாவிரதப் தொடர் போராட்டத்தின் அடையாளமாக ராவணன் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர்.