Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லியின் பிட்ச் எங்களுக்கு சாதகமாக இருந்தது … சிஎஸ்கே கேப்டன் தோனி …!!!

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.

நேற்று நடைபெற்ற 23 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் , ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. குறிப்பாக சென்னை அணி தொடக்க வீரர்களான ,ருதுராஜ் – டுபெலிசிஸ் பார்ட்னர்ஷிப் அதிரடி ஆட்டத்தை காட்டியது. வெற்றி குறித்து சென்னை அணியின் ,கேப்டன் தோனி கூறும்போது, எங்களுடைய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்ததாகவும் ,அதற்காக பவுலிங் சிறப்பாக இல்லை என்பது அர்த்தமில்லை. குறிப்பாக டெல்லி அணியின் ஆடுகளும் ஆச்சரியமளிக்கும் வகையில் இருந்ததாகக் கூறினார்.

இதனால் பேட்டிங் செய்வதற்கு எளிமையாக இருந்ததாகவும் , பனித்துளிகள் ஏதுமில்லாமல் நன்றாக விளையாட முடிந்தது என்று கூறினார். கடந்த சீசனில் இவ்வாறு அமையவில்லை என்றும் , இந்த சீசனில் அணியின் வீரர்கள் ,அதிக பொறுப்புடன் செயல்படுவதாகவும் கூறினார். வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கும் , வாய்ப்பு கொடுத்து நாங்கள் பாராட்டி வருவதாக கேப்டன் தோனி கூறினார். இதைத்தொடர்ந்து தோல்வியை குறித்து ,ஹைதராபாத் அணியின்  கேப்டன் வார்னர் கூறும்போது, ஐந்து போட்டிகளில் ஐதராபாத் அணி தோல்வியை சந்தித்துள்ளது. தோல்விக்கு நானே முழுப்பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன் என்றும், என்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்றும் கேப்டன் வார்னர் கூறினார்.

Categories

Tech |