டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசி அதற்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்ய இயலாது என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக தலைவர்அனுராக் தாகூர், கபில் மிஸ்ரா , பர்வேஷ் வர்மா மீது நடவடிக்கை கோரி மனுத்தாக்கல் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த போது , தற்போதைய சூழலில் FIR பதிவு செய்தால் இயல்பு நிலை திரும்ப எந்த வகையிலும் அது உதவாது. எனவே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதற்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்ய இயலாது என்று டெல்லி காவல்துறை தெரிவித்தது.
இதற்க்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய டெல்லி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அனைத்து வீடியோ பதிவுகளையும் ஆராய்ந்துவருகிறோம். அதன்படி FIR பதிவு செய்ய இயலும். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் இதுவரை 48 FIR பதிவு செய்யப்பட்டுள்ளது என டெல்லி காவல்துறை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.