இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டெல்லியில் நடைபெறுவது உள்நாட்டு பிரச்சனை என்று தெரிவித்தார்.
இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்த டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசியதில், டெல்லியில் ஏற்பட்ட வன்முறை உள்நாட்டு பிரச்சனை. டெல்லியில் வன்முறை ஏற்பட்டு இருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் அதுபற்றி பிரதமரிடம் பேசவில்லை.
CAA குறித்து பேச விரும்பவில்லை:
மக்களுக்கு அரசு நல்லதே செய்திருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். மத சுதந்திரம் பற்றி மோடியிடம் பேசினேன்.பல்வேறு மக்களிடம் பேசியதிலிருந்து மத சுதந்திரம் குறித்த எதிர்மறையான கருத்துக்கள் வரவில்லை. மத சுதந்திரத்துக்காக இந்தியா கடுமையாக பாடுபட்டு வருகிறது. இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி இருக்கிறார்.
பாகிஸ்தான் குறித்து பேசினேன் :
பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடியிடம் பேசினேன். இந்தியா வலிமையான நாடு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் திறன் அவர்களிடம் உள்ளது. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு இந்தியாவுக்கு உதவ தயார். அமைதியான மனிதரான மோடி பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்.
ஈரானைச் சேர்ந்த சுலைமானியை சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா கொன்றது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்தியா
பாகிஸ்தான் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் :
இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சனையாக காஷ்மீர் உள்ளது. எந்த ஒரு பிரச்சனையிலும் இரு பக்கங்கள் உள்ளது.